கூந்தன்குளம் - புள்ளினங்களின் புகலிடம் Koonthankulam – The mansion for migratory birds

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
Note the nest  கூரையில் கூடு     PC: Kalirajan Subramanian

ஒவ்வொரு ஆண்டும் October முதல் March வரையிலான மாதங்களில்  நம்மைச்சுற்றி ஒரு அழகான, வியத்தகு நிகழ்வு நடந்தேறுகிறது. அதுதான் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இமயத்தையும் தாண்டி மங்கோலியா, சைபீரியா போன்ற பனிப்பிரதேசங்களில் இருந்து நமது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வருகை புரியும் பறவைகளின் பனிக்கால வலசை. கடுமையான குளிருக்கு தப்பி, உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காக இடம்பெயரும் பறவைகள் மார்ச்-ஏப்ரல் வரை தெற்கு ஆசிய நாடுகளின் நீர்நிலைகள் மற்றும் வனப்பிரதேசங்களில் தம் கூடுகளை அமைக்கும். குஞ்சு பொரித்து அவை பறக்கும் பருவத்திற்கு வந்தவுடன் இங்கிருந்து ஆப்பிரிக்க கண்டத்திற்கு வலசை செல்லும். முடிவில் மீண்டும் தமது இயல்பு வசிப்பிடமான மத்திய ஆசிய நாடுகளுக்கே  திரும்பும்.

Every year between the months of October and March an amazing event of natural history happens around us. It is the winter migration of birds across thousands of kilometers from countries like Mongolia, Siberia to various parts of our country. Escaping the harsh winters of Central Asia these birds migrate in search of food, nesting and breeding habitats to the forests and wetlands of South Asia. Once the nestlings reach the stage of flying they migrate to the African continent from where eventually they return to their original habitats in Central Asia.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
Winter skies dotted with birds  பனிக்கால வானில் சிறகுகளின் புள்ளிக்கோலம்  PC: Kalirajan Subramanian 
பன்னெடுங்காலமாக பருவம் தோறும் தவறாது நடைபெறும் பேரதிசயம் இது. காந்த அலைகளின் போக்கை கொண்டும், தட்ப வெட்ப சூழலை கிரகித்தும் பறவை மூதாதையர் இயற்கையாக தேர்ந்தெடுத்த  இடங்கள், வழிவழியே அவற்றின் சந்ததிகளுக்கு பரப்பப்படுகிறது. அவ்வாறான வாழிடங்கள் நீர், உணவு மற்றும் கூடமைக்க ஏதுவாக நல்ல நிலைமையில் இருக்கும் வரை பறவைகள் அவ்விடங்களுக்கு ஆண்டு தோறும் வருகை புரியும்.

This incredible event has happening season after season since time immemorial. Using earth’s magnetic field and the climatic conditions of each region as compass these birds have been making these migratory choices over multiple generations. If such places that were chosen by their ancestors continue to remain in suitable condition for their annual migration, these birds return to the same territory every year.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
Eurasian collared dove கள்ளிப்புறா  PC: Kalirajan Subramanian
தென்னிந்தியாவில் குளிர்காலம் மிதமாக இருப்பதால் பழவேற்காடு, ரங்கந்திட்டு, வேடந்தாங்கல் போன்ற இடங்கள் பறவை வலசைக்கு உகந்தவையாக உள்ளன. அவ்வரிசையில், ஏராளமான பறவைகளுக்கு புகலிடமாக விளங்கும் மற்றொரு ஊர் தான் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம். இது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயமாக 1994-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு ராம்சர் சைட் என்ற உலக புகழ்பெற்ற நீர்நிலை பாதுகாப்பு பட்டியலிலும் இடம்பெற்றது. நாங்கள் பிறந்த ஊரான நெல்லையில் இருக்கும் இந்த அழகிய கிராமத்திற்கு முதல் முறை சென்று வலசை விருந்தினர்களையும், இங்கேயே வசிக்கும் பறவை இனங்களையும் தரிசிக்கும் பாக்கியம் இவ்வாண்டு தான் எங்களுக்கு வாய்த்தது. நாங்கள் சென்ற சமயம் அங்கு தாமிரபரணி நீர் பறவைகள் கணக்கெடுப்பிற்காக தன்னார்வலர்கள் குழு ஒன்று வந்து ஆய்வு செய்து கொண்டிருத்தத்தைக் கண்டு வெகுவாக மகிழ்ந்தோம். 

As South India witnesses moderate winter, wetlands like Pulicat, Ranganthittu and Vedanthangal turn out to be ideal migratory habitats. Yet another landscape in South Tamilnadu that is a safe home for numerous birds is the Koonthankulam village in Tirunelveli district. It was declared as the Koonthankulam wildlife sanctuary in 1994 and enlisted as Ramsar site in 2021. Having born in Tirunelveli, it was only in this migratory season that we happened to visit the sanctuary and sight its rich avian diversity in the form of both resident and migrant birds. The day of our visit, we were very happy to see that a team of volunteers were also bird watching for the Thamirabarani Waterbird Census.

Asian open billed stork நத்தைக்குத்தி நாரை  PC: Kalirajan Subramanian

கூந்தன்குளம் நெல்லையிலிருந்து நான்குனேரிக்கு செல்லும் சாலையில் மூலைக்கரைப்பட்டிக்கு அருகில் உள்ளது. இங்குள்ள ஏரிகளும், குளங்களும், புல்வெளிகளும் சிறிய முதல் பெரிய அளவிலான பறவைகள் வரை வசிப்பதற்கு ஏற்ற இடங்களாக உள்ளன. முக்கியமாக இங்குள்ள மக்களிடையே பறவைகள் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் அதிகமாக உள்ளதால் அவர்கள் இடையூறு ஏதும் செய்யாது இங்கு வரும் பறவைகளை மிகுந்த அக்கறையுடன் உடன்-வசிக்க  ஒத்துழைக்கின்றனர். பறவைகளின் உயிருக்கே ஆபத்தாக விளையும் ஒலிமாசைத் தவிர்க்க தீபாவளி பண்டிகைக்கு இம்மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை.

Koonthankulam is situated near Moolaikaraipatti on the Tirunelveli-Nanguneri road. The waterbodies and grasslands here are very suitable habitats for birds across sizes. More importantly, the people here are quite aware and knowledgeable on the various birds that co-exist here and strive to ensure their safety and wellbeing. The villages around the sanctuary do not burst crackers for Deepavali as the noise pollution could be fatal for birds.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
A tripartite meeting -Stilts, Lapwing and Egret முத்தரப்பு பேச்சுவார்த்தை- உள்ளான்கள் ஆள்காட்டி கொக்கு  PC: Kalirajan Subramanian

இப்பேற்பட்ட கிராமவாசிகளுள் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர்  திரு. பால்பாண்டி ஐயா அவர்கள். பறவை மனிதர், பறவை காவலர் போன்ற பல்வேறு பட்டங்களுக்கு உரியவர் ஐயா பால்பாண்டி அவர்கள். இவரும், காலம் சென்ற இவரது துணைவியாரும் கூந்தன்குளத்தின் பறவைகளை தம் பிள்ளைகளை போலவே  பேணுபவர்கள். ஐயாவை சந்தித்து, அவருடன் உரையாடி, இப்பகுதி பறவைகளைப்பற்றிய தகவல்களை அறிந்து கொண்டதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். அவருடன் தொடர்பு கொள்ள உதவிய பல்லுயிர் ஆர்வலர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இங்கு நாங்கள் கண்ட பறவைகளுள் சிலவற்றை பற்றிய  சுவாரஸ்யமான சிறு குறிப்புகள் வருமாறு:

One among the cooperative villagers who deserves a special mention is Mr. Pal Pandi. He and his late wife have been voluntary guardians of the whole sanctuary. Mr. Pal Pandi is extremely knowledgeable of the birds that can be seen here and has gone to great lengths to protect them. He is the recipient of numerous awards and honors for his noble service. He has been bestowed with various titles like the Savior of birds, Birdman etc. It was our great pleasure to meet him and gather valuable information on the birds found in the sanctuary. We extend our heartfelt thanks to all the fellow Wildlife enthusiasts who helped us contact him. Below are some interesting details on few of the many birds we sighted in Koonthankulam.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
With Koonthankulam's Birdman Mr. Pal Pandi பறவை மனிதர் திரு. பால்பாண்டி ஐயாவுடன்  

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
Pacific Golden Plover  கல்பொறுக்கி உப்புக்கொத்தி    PC: Kalirajan Subramanian

 கல்பொறுக்கி உப்புக்கொத்தி (Pacific Golden Plover - Pluvialis fulva)

சைபீரியா மற்றும் அலாஸ்காவிலிருந்து வலசை வரும் இப்பறவை தங்கம் மற்றும் பழுப்பு நிறத்தின் கலவையில் காணப்படும். இதன் உடல் நீளம் வெறும் 25cm அளவே. இவற்றுள் சில பறவைகள் வலசை இடத்திற்கு வரும்போதே ஜோடியாக வருபவை. மற்றவை வலசை வந்தபின் இணையை தேர்ந்தெடுப்பவை. முட்டையிட்டு சுமார் ஒரு மாதத்தில் குஞ்சுகள் வெளிவரும். அவை தாமே இறை தேடப்படித்த பின்னும் சிறு காலம் பெற்றோரின் இறகில் இதம் காணும் தன்மை உடையவை.

This small bird of body length 25cm visits from Siberia and Alaska. Some of these birds arrive at the sanctuary as pairs. Others migrate and then choose their mate. Their eggs hatch in about a month. Even after learning to forage on their own, the young ones have been observed to return to the wings of their parents for warmth. 

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
Eurasian Spoonbill கரண்டிவாயன்   PC: Kalirajan Subramanian
கரண்டிவாயன் - (Eurasian Spoonbill - Platalea leucorodia)

பொதுவாக உடல் முழுதும் வெண்மை நிறம் கொண்ட இப்பறவையினம் கருத்த கால்கள் மற்றும் அலகுகளைக் கொண்டிருக்கின்றன. அலகின் நுனியில் மஞ்சள் புள்ளியும், மார்பில் மஞ்சள் நிறப்பட்டையும் கொண்டிருப்பதும் உண்டு. சப்பையான கரண்டியைப்போன்ற அலகினால் இவற்றிற்கு இப்பெயர். இங்கிலாந்து, ஸ்பெயின் முதல் வட ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் வரை பரவியுள்ளன. இவை ஐரோப்பாவில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை வெப்பமுள்ள இடங்களுக்கு குளிர்காலங்களில் வலசை வருகின்றன. ஐரோப்பிய பறவைகள் இனவிருத்திக்கு ஆப்பிரிக்கா செல்லும், ரஷ்ய பறவைகள் இந்தியாவிற்கு வலசை வரும்.

White bird with black legs and bill. Tip of the bill and chest may have a yellow band as well. Their name is derived from the way their bill resembles a spatula. These birds are more commonly seen in Europe but pread till West Africa, Spain and Japan. They migrate to warmer regions during winter. It has been observed that birds from Europe migrate to Africa for breeding where as the birds from Russia migrate to India for the same reason.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
நெடுங்கால் உள்ளான்  Black-winged Stilt  PC: Kalirajan Subramanian

நெடுங்கால் உள்ளான் (Black-winged Stilt - Himantopus himantopus)

இவை பெரும்பாலும் உள்ளூரிலியே வசிப்பவை அல்லது சிறு தொலைவு மட்டுமே இடம்பெயர்பவை. இவற்றின் உடல் நீளம் 36cm.  நீளமான பிங்க் நிற கால்களும் நீண்ட மெலிந்த கரும் அலகும் கொண்டவை. இவை பெரும்பாலும் கரையோர மண்ணில் உள்ள பூச்சி, புழுக்களை உண்பவை.

Black-winged stilts measure 36cm long across their body. They are mostly residents or small-distance migrants. They are characteristic of their long pink legs and long slender beaks. They forage on insects and worms on the banks of water bodies.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
Little ringed plover பட்டாணி உப்புக்கொத்தி  PC: Kalirajan Subramanian

பட்டாணி உப்புக்கொத்தி (Little Ringed Plover - Charadrius dubius)

கண்ணைச்சுற்றி காணப்படும் மஞ்சள் வளையம் இப்பறவையின் ஓர் முக்கிய அடையாளம் ஆகும். சாம்பல்-பழுப்பு கலந்த நிறத்தில் பின்புறமும் இறக்கைத் தொகுதியும் கொண்டது. வெண்ணிற மார்பும் கழுத்தைச் சுற்றி ஒரு கரும்பட்டையும் உண்டு. இப்பறவையின் ஒரு உட்பிரிவு இமயத்திற்கு அப்பாலிருந்து வலசை வரும். மற்றோர் பிரிவு நம் நாட்டிலேயே பரவலாக வசிப்பது.

The yellow ring around the eyes is a distinguished feature of these plovers. Wings and back side are a mix of ashy brown. Chest is white and a black ring surrounds the neck. One of their subspecies migrates from beyond Himalayas. Another is a resident seen widely in India.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
பொரி உள்ளான் Wood Sandpiper  PC: Kalirajan Subramanian
பொரி உள்ளான் Wood Sandpiper  - Tringa glareola)

ஒரு வலசை போகும் டிரிங்கா வகை உள்ளான். இவை நீளக் கால்கள் கொண்ட நடுத்தர அளவுள்ள கரைப்பறவைகளாகும். நன்னீர் ஏரிகளிலும் சதுப்புநிலங்களிலும் இவற்றைக் காணலாம். இந்தியா முழுவதும் பனிக்காலத்தில் காணப்படும். ஆகஸ்டில் வந்து ஏப்ரலில் தான் வலசை போகும்.

The wood sandpiper is a small wader. This Eurasian species is the smallest of the shanks, which are mid-sized long-legged waders.The wood sandpiper breeds in subarctic wetlands from the Scottish Highlands across Europe and then east across the Palearctic. They migrate to Africa, Southern Asia, particularly India, and Australia.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
கவுதாரி Grey Francolin  PC: Kalirajan Subramanian

கவுதாரி (Grey Francolin - Ortygornis pondicerianus)

தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவை இது. வயற்காடுகளில் தானியங்களைப் பொறுக்கியும் கறையான்களையும், வண்டுகளையும் உண்ணும். வேகமாகப் பறக்கவியலும் என்றாலும் பெரும்பாலும் பூமியிலேயே ஓடியாடும். இவற்றின் மாமிசத்திற்காகவே இவை பிடிக்கப்படுகின்றன. இந்தப் பறவைகள் மனிதர்களைக் கண்டால் பயத்தில் ஓடி ஒளிந்திடும். பூச்சிக்கொல்லிகளாலும், உணவுக்காவும் இப்பறவைகள் வெகுவாக அழிக்கப்பட்டு வருகின்றன. இக்காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்து இவை அழிவாய்ப்பு இனப்பட்டியலில்(Vulnerable conservation status) சேர்க்கப்பட்டுள்ளன. 

The francolin is barred throughout and the face is pale with a thin black border to the pale throat. It picks on the grains in the fields and also feeds on termites and bees. They prefer running on the land though they can fly, even in danger. They are caught for meat and hence fear humans. Their numbers have drastically reduced owing poaching and usage of pesticides. The International Union of Conservation of Nature(IUCN) has flagged them as Vulnerable.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
மஞ்சள் மூக்கு ஆள்காட்டி Yellow-wattled Lapwing  PC: Kalirajan Subramanian 
மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow-wattled Lapwing - Vanellus malabaricus)

இவை  இந்திய துணைக்கண்டம் மட்டுமே வாழ்விடமாகக்கொண்ட ஆள்காட்டி இனமாகும். கூரிய ஒலியும் வேகமாக பறக்கும் தன்மையும் உடையவை. இவை வலசை போகாவிடினும், சீதோஷண நிலைக்கும் பருவ மாற்றத்திற்கும் மழைக்கும் ஏற்ப இடம்பெயர்தல் உண்டு. இவை தரையின் மீது சிறு கூழாங்கற்களை வட்ட வடிவில் சேமித்து வைத்து எளிதில் புலப்படாதவாறு கூடுகள் அமைக்கின்றன. 4 முட்டைகளை நிலத்தில் அமைந்த தன் கூட்டில் இடுகின்றன. பெற்றோர் தன் மார்பிலுள்ள இறகுகளை 10 நிமிடங்கள் வரை நனைத்து பின் கூட்டுக்கு திரும்பி தன் முட்டைகளையோ குஞ்சுகளையோ குளிர்வடைய வைக்கின்றன. குஞ்சுகள் தன் பெற்றோர் அபயக்குரல் எழுப்பும் வேளையில் தரையோடு ஒன்றி சிறு அசைவுமின்றி அமரும். முதலில் இட்ட முட்டைகள் பொரிந்தாலும் தன் இனத்தைக்காக்க இரண்டாவது முறையும் முட்டையிடும் பழக்கம் உடையவை. முந்தைய ஈணில் பிறந்த குஞ்சும் பெற்றோருடன் இணைந்து அடைகாத்தலை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். குஞ்சுகளைக் காக்க பெரிய பறவைகள் காயம் பட்டது போல் நடித்தும், கத்தியும் தன்பால் கவனத்தைத் திருப்பி பாதுகாக்கும்.

Yellow wattled lapwings are a resident of the Indian subcontinent. They are characteristic of their sharp calls and flying speed. They tend to move over shorter distances to different places based on the climatic condition and availability of water. They are ground nesters arranging pebbles on the ground in circles above which their nest is built. Each nest can have 4 eggs. Parents visit water and wet their breast feathers ("belly soaking") for as much as 10 minutes to soak water, which may then be used to cool the eggs or chicks. Chicks squat flat on the ground and freeze when parents emit an alarm call. A second brood may be raised and young from a previous brood have been seen along with parent birds incubating a second clutch. The parents act injured or emit loud calls to divert the attention of the predator from the eggs towards themselves.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
Spot billed Pelican nest and nestlings  கூழைக்கடாவின் கூடும் குஞ்சுகளும்   PC: Kalirajan Subramanian

புள்ளி அலகு கூழைக்கடா (Spot-billed Pelican - Pelecanus philippensis)

இவை பனை மரங்களின் உச்சியில் கூடமைத்து குஞ்சுகளுடன் இருப்பதை கூடங்குளத்தில் கண்டோம். ஒரு கூழைக்கடா அலகில் கூட்டிற்கான குச்சிகளை கொண்டு செல்லும் காட்சியையும் கண்டோம் . இதன் எடை 4.5 முதல் 11 கிலோகிராம் வரை இருக்கும். சிறகுகளின் நீளம் 2.7 மீ. மொத்த உயரம் 127 முதல் 182 செ.மீ. அலகு நீளம் 22 செ.மீ. கூழைக்கடாக்கள் நெடுந்தூரம் வலசை செல்லும் இயல்புடையவை. இவ்வினத்தின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இதனை அச்சுறுத்துநிலையை எட்டியவை (Near Threatened conservation status) என்ற பிரிவில் ஐயுசிஎன்(IUCN) - சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
A pelican gathering nesting material  கூட்டிற்கான குச்சிகளை சுமந்து செல்லும் புள்ளி அலகு கூழைக்கடா  PC: Kalirajan Subramanian

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
A standing sleeper நின்றே உறங்கும் கூழைக்கடா   PC: Kalirajan Subramanian

We saw the Pelicans nesting atop Palm trees with their chicks in Koonthankulam. It was incredible how these heavy birds chose specific palm trees. One bird was observed carrying nest building material in its bill. Spot billed pelicans weight 4.5-11kg. Wingspan 2.7m total height 127-182cm. Bill length 22cm. They are long distance migrants. As their population is on the decline IUCN has red listed their status as Near Threatened.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
Pied Kingfisher  கரும்புள்ளி மீன்கொத்தி   PC: Kalirajan Subramanian

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
Pied Kingfisher  கரும்புள்ளி மீன்கொத்தி   PC: Kalirajan Subramanian
கரும்புள்ளி மீன்கொத்தி (Pied Kingfisher - Ceryle rudis)

இது நீர்நிலைகளில் மீன்களைப் பாய்ந்து பிடிக்கும் முன்பு பறந்து கொண்டிருக்கும். இப்பறவை ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் பரவலாகக் காணப்படுகிறது. இவை மீன்களையே முதன்மை உணவாகக் கொண்டாலும், பெரிய நீர்வாழ் பூச்சிகளையும் உண்ணும்.

Pied Kingfisher hovers over the water before it dives to catch the fish. It is seen widely in Africa and Asia. Though fish is their main diet they also feed on large water insects.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
துப்பு மண்கொத்தி Marsh Sandpiper   PC: Kalirajan Subramanian

சதுப்பு மண்கொத்தி (Marsh Sandpiper - Tringa stagnatilis)

இது ஒரு சிறிய கரைப்பறவை ஆகும். கிழக்கு ஐரோப்பா மத்திய ஆசியா ஆகிய கண்டங்களில் புல்வெளி மற்றும் ஈரநிலங்களில் வசிக்கும் இது பனிக்கால வலசை பறவையாகும். 

Marsh sandpipers are small shore birds. They live in the grasslands and wetlands of Eastern Europe and Central Asia. They are winter migratory birds.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
வரித்தலை வாத்து  Bar-headed Goose  PC: Kalirajan Subramanian

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
நீ மழை நான் குடை  You are the wind beneath my wings  PC: Kalirajan Subramanian

வரித்தலை வாத்து (Bar-headed Goose - Anser indicus)

வலசை பறவைகளுள் மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாக கருதப்படுவது வரித்தலை வாத்து. இதை காண்பதற்கெனவே நாங்கள் கூந்தன்குளம் சென்றோம் என்றால் அது மிகையாகாது. நீண்ட நேரம் காக்க வைத்து, எங்கள் பொறுமைக்கு பரிசாக பின்னர் கூட்டமாக வந்து எங்களுக்கு காட்சி கொடுத்தது இந்த பறவை. பறக்கும் பொழுது இவையனைத்தும் ஒன்று சேர்ந்து குரலெழுப்பும். நெடிய காத்திருப்புக்கு பின் வானில் இவற்றின் ஒலியைக் கேட்டதும் எங்களுக்குள் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அந்த நொடி எங்கள் மனதில் என்றும் நிறைந்திருக்கும்.

Bar headed goose is one of the most prominent and mighty migratory bird species. It would not be an exaggeration if I said that they were the main reason behind our visit to Koonthankulam. It was only after a testing prolonged wait that we could sight them. These birds are known for the calls they make in unison during their flight. The waterbody was almost still and silent. We were seated with our birding gear facing it, easy to sight the rest of the birds that showed up, off and on. We had seen only a pair of geese high in flight during our drive early that morning. Almost when we thought we had to be content with just that, their characteristic honks emanated from the skies behind us. Then the honks went above our heads and we could see a good number of them landing on water. That moment our joy knew no bounds and the scene will be etched in our minds forever.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
A flock of Bar headed geese landing on water  நீரிலிறங்கும் விமானங்கள்      PC: Kalirajan Subramanian

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
அண்டம் தாவிடினும் அமைதியாய் அமைகிறோம்  Feeling at home far far away PC: Kalirajan Subramanian

இவை மத்திய ஆசியாவின் மலை ஏரிகளில் இனப்பெருக்கம் செய்து தெற்காசியாவிற்கு வலசை வரும். மிக அதிக உயரத்தில் பறந்து செல்லும் பறவையாக இது இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு பறக்கும் போது, அவை காற்றில் மிதந்துச் செல்வதில்லை. மாறாக இறக்கைகளை, பலமாக அடித்துக்கொண்டு பறக்கின்றன. இதனால் உடல் வெப்பமேறி, உயரத்தின் குளிர்ச்சியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

Bar headed geese live in colonies on mountain lakes in Central Asia and migrate to South Asia during winter. They are considered to be the birds that scale the highest in flight. When they fly in such high altitudes they don't glide, rather they flap their wings heavily. This helps in keeping their body warm and protects them from the low temperature up there.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
Bar headed geese up above the sky சலித்து போனேன் மனிதனாய் இருந்து…பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து பறந்து பறந்து…    PC: Kalirajan Subramanian

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
The two dogs in the background terrified the geese வரித்தலை வாத்துகள் அவ்விரு நாய்கள் வந்தபோதெல்லாம் அஞ்சி  ஒன்றாக வேறிடம் பறந்தன  PC: Kalirajan Subramanian

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
பறவைகளை அவ்வப்போது விரட்டிய நாய்கள்   The dogs that chased the birds    PC: Kalirajan Subramanian

பூமியை விட்டு மேலே செல்ல,செல்ல உடலுக்குத் தேவைப்படும் உயிர்க்காற்று(oxygen) மிகவும் குறைவாகவே கிடைக்கும். அக்குறைந்த காற்றை, சிறப்பாக சேமிக்கவும் பயன்படுத்தவும், இதன் நுரையீரல் மற்றும் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் பிரத்தியேக முறையில் அமைந்துள்ளதால், அவை இப்பறவைக்கு தேவைப்படும் உயிர்க்காற்றை, செவ்வனே உடல்முழுவதும் சீராகத் தருகின்றன. இதனால் இப்பறவையால் 7 மணி நேரத்திற்கும் மேலே, தொடர்ந்து பறக்க முடிகிறது. அதாவது 1000 கி.மீ.களுக்கும் மேலே, எங்கும் நில்லாமல் தொடர்ந்து பறக்கிறது.

Their lungs and blood vessels are well equipped to handle the low oxygen content in high altitudes. Hence blood flow is uniform to all parts of their body enabling them to fly even for 7 hours non-stop covering as much as 1000 kilometers in one flight.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
வயல்வெளிகளில் உலவிய நாரைகளும் வாத்துகளும்    PC: Kalirajan Subramanian

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
மொழி இல்லை மதம் இல்லை யாதும் ஊரே என்கிறாய் புல் பூண்டு அது கூட
சொந்தம் என்றே சொல்கிறாய் 
   PC: Kalirajan Subramanian

சிறு காலின் மென் நடையில் பெரும் கோலம் போட்டு வைப்பாய் PC: Kalirajan Subramanian

இவற்றுள் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்காக கழுத்தில் பட்டையிடப்பட்ட சில பறவைகள் நில்லாமல் தொடர்ச்சியாக இமயமலையை  கடந்துள்ளதையும் கண்டுள்ளனர். மேலும், சமீபத்தில் கூ ந்தன்குளத்திற்கு வலசை வந்த ஒரு வரித்தலை வாத்து மங்கோலியாவில் பட்டை கட்டப்பட்டது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Researchers have observed that some of the collared geese have cross Himalayas non-stop. Also, recently a collared geese sighted in Koonthankulam was traced to have been collared in Mongolia.

https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/bar-headed-goose-tagged-in-mongolia-spotted-at-koonthankulam-birds-sanctuary/article66467072.ece

Northern Shovelers and Garganeys   தட்டைவாயன்கள், நீலச்சிறகிகள்    PC: Kalirajan Subramanian

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
Northern Pintails ஊசிவால் வாத்துகள்     PC: Kalirajan Subramanian

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
Knob-billed duck   செண்டு வாத்து    PC: Kalirajan Subramanian

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
Juvenile Brahminy Kite   இளம் செம்பருந்து  PC: Kalirajan Subramanian

இது போக, ஊசிவால் வாத்து (Pintail), நீலச்சிறகி (Garganey), தட்டை வாயன் (Northern Shoveler)  போன்ற வலசை வாத்து வகைகளையும், கம்பீரமாக  இறகை விரித்து வானில் வட்டமிடும் Eurasian marsh harrier, Montague’s harrier போன்ற வலசை பருந்து வகைகளையும் கண்டோம். இறுதியாக நாங்கள் வெகுநாட்களாக காண முயற்சித்துக்கொண்டிருந்த கொம்பன் ஆந்தை (Indian Eagle Owl), புள்ளி ஆந்தை (Spotted Owlet) ஆகியவற்றையும் கண்டோம். வெகு தொலைவில் கண்ணைத்தப்பிவிடும் வண்ணம் அசைவில்லாமல் சூழலுக்கு ஏற்ற நிறமறைவுடன் வீற்றிருந்த கொம்பன் ஆந்தையைக் கண்டது மிக அரிய நிகழ்வாகவே இருந்தது.

Apart from this, we also saw Pintails, Garganey and Northern Shovelers. We were also lucky to sight the Eurasian marsh harrier and Montague’s harrier in their majestic flights. We wrapped-up our visit with the sighting of the stunningly still, elusive, superiorly camouflaged Indian Eagle Owl and the extremely beautiful group of Spotted owlets.

எங்க இருக்கோம்? எத்தனை பேர் இருக்கோம்?  In perfect camouflage Indian Eagle Owl(s) கொம்பன் ஆந்தை  PC: Kalirajan Subramanian

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
இது தான் நான்  Indian Eagle Owl closeup from long distance    PC: Kalirajan Subramanian

பாறைக்குள் புள்ளி ஆந்தைகள்  Spotted Owlets in a crevice  PC: Kalirajan Subramanian

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் நம்முடன் இந்த பூவுலகை பகிர்ந்துகொள்ளும் சக ஜீவராசிகளின் மீது ஆர்வமும், மதிப்பும், வியப்பும் கொண்ட பல்லுயிர் ஆர்வலர்கள் சென்று வரவேண்டிய ஒரு இடமாகும். அங்கு செல்லும் எவரும்  தயவு கூர்ந்து நெகிழி குப்பை வீசுவது, உரத்த குரலில் பேசுவது மற்றும் வாகனத்தில் அதிக ஒலி எழுப்புவது, அதிவேகமாக ஓட்டிச் செல்வது போன்ற தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம்.

Koonthankulam wildlife sanctuary is a place any wildlife enthusiast who respects, admires and is intrigued by fellow forms of life should visit.  When you are there please make sure that you do not litter, especially do not throw plastic anywhere, do not speak or play music in loud volume, drive in low speed.

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
A Grey heron on the golden waters சாம்பல் நாரை    PC: Kalirajan Subramanian

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
Red-naped ibis  செங்கழுத்து அரிவாள் மூக்கன்    PC: Kalirajan Subramanian

Koonthankulam birding birds conservation migratory winter thamirabarani thamirabharani tirunelveli nellai nature wildlife
வலசை-வல்லவன் வரித்தலை வாத்து  The mighty migrant Bar-headed goose PC: Kalirajan Subramanian  

You do not have to be good.
You do not have to walk on your knees 
for a hundred miles through the desert, repenting.
You only have to let the soft animal of your body
love what it loves.                         
Tell me about despair, yours, and I will tell you mine.
Meanwhile the world goes on.
Meanwhile the sun and the clear pebbles of the rain
are moving across the landscapes,
over the prairies and the deep trees,
the mountains and the rivers.
Meanwhile the wild geese, high in the clean blue air,
are heading home again.
Whoever you are, no matter how lonely,
the world offers itself to your imagination,
calls to you like the wild geese, harsh and exciting—
over and over announcing your place
in the family of things.
        -Mary Oliver
        Wild Geese

Comments

Anonymous said…
Wow!! Such an amazing write up and very informative too. Those high res pictures are incredible!! Great work!! - Bhavani
Unknown said…
A very good read - informative and
well written.Good team work complimented with nice pictures.. Keep going!
Priya Rajan said…
Thank you Bhavani. Glad you enjoyed it.
Priya Rajan said…
Thank you for your comment. Glad you enjoyed it