சொர்க்கமே என்றாலும் … country roads take me home -Part1

 

Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature
Seranmahadevi river banks சேரன்மகாதேவி ஆற்றங்கரை மருதம்


Aug 1995...பொறியியல் பட்டபடிப்பிற்காக வீட்டிலிருந்து புறப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை கல்வி, வேலை, குடும்பம், சுற்றுலா என்று பல காரணங்களுக்காக மாநிலங்களையும், நாடுகளையும் சுற்றியாயிற்று. இன்று பெங்களூரு என்பது "நம்மூரு நம் மனே"(kannada - our city our home) என்றும் மனதில் பதிந்தாயிற்று. இருந்தாலும் தாமிரபரணியும், மேற்குத்தொடர்ச்சி மலைகளும் சூழ்ந்த, பிறந்த ஊராம் நெல்லைக்கு என்று புறப்பட்டாலும் உண்டாகும் உணர்வுகள் அலாதியே.

The first time I packed my bags and stepped out of home was to my B.Tech grad school in Aug 1995... Since then, work and life has taken us to many states and countries. Today Bengaluru evokes the feeling of my city my home. Yet, a journey to Nellai(Tirunelveli), our native town nurtured by the perennial river Thamirabarani and the Western Ghats, always rekindles indescribable emotions.

ஊரடங்கு, மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து கட்டுப்பாடுகள், வீட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மகள், எங்களையும் நலம் விசாரித்துச் சென்ற தொற்று  என பல்வேறு தடைகளால் 2019க்கு பிறகு  ஊரில் பெற்றோரையும் கூட சென்று சந்திக்க முடியாத நெருக்கடி. ஒரு வழியாக 2021-பிப்ரவரியில் ஒரே ஒரு வாரம் எல்லோரும் அவரவர் லேப்டாப்களை சுருட்டிக்கொண்டு ஒரு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். போதவே இல்லை; யானைப்பசிக்கு சோளப்பொரி போல. மீண்டும் மூவரின் அட்டவணைகளை ஒழுங்கு படுத்தி எல்லாவிதமான தொற்று தற்காப்புகளுடன் கடந்த மாதம் பயணம்;  தரணி புகழ் தாமிரபரணியின் அரவணைப்பில் இம்முறை பதினைந்து நாட்கள். காலை 5 மணிக்கு வண்டியை எடுத்தால் பிற்பகல் 3-4 மணிக்குள் போய்விடக்கூடிய 600Km பயணம்தான். எவ்வளவோ முறை அசால்டாக சென்று வந்திருக்கிறோம். பெங்களூருவின் அதிகாலைக் குளிரையும், பனியையும் ரசித்தவாறு; பார்டரில் தெரியும் முதல் தமிழ் பலகையைப் பார்த்ததும் வரும் சிறு புன்னகையை உணர்ந்தவாறு; ஹைவேயில் வாடிக்கையான உணவகங்களில் சிற்றுண்டி அருந்தி; ராக்கிக்கு நீரும் உணவும் சில நிமிட நடைப்பயிற்சியும் கொடுத்து என்று இந்த பயணங்கள் எங்களுக்கு என்றும் ஒரு இனிமையான,  முழுமையான அனுபவம். எங்களுடன் பயணிக்கும் இசை, தருமபுரி நெடுஞ்சாலைக்கு இருபுறமும் துணையென நிற்கும் மலைகள், ஐந்து மணிநேரத்திற்குள் சேலம் வந்ததா என்ற மதிப்பீடு, கரூர் நாமக்கல்லை தாண்டி திண்டுக்கல் வரும்போதே ஏதோ கொடைக்கானலை கண்டது போல ஒரு பரவசம், அதையும் தாண்டி நெடுஞ்சாலை மதுரையை தொட்டதுமே மனதிற்குள் மெலிதாய்  வீசும் மண்வாசனை. கோவில்பட்டி சாத்தூர் தாண்டும் பொழுது அவ்வழியே கல்லூரிக்குச் சென்ற ஞாபகம், கயத்தாறு வந்துவிட்டால் கையில் பிடிக்க முடியாது; ஊர் இந்தா வந்துட்டுல்லா என்ற ஃபீலிங். இவ்வாறாக it's a total package.

Our last visit home was in early 2019 post which the pandemic, lockdowns, travel restrictions, our own tryst with covid and having a twelfth grader at home all had blocked our visit for almost two years. Somehow during the unlock in Feb2021 we picked all our devices and rushed home for just a week. This was so inadequate that it actually made us long for another visit. So, sync-ing all our schedules we went again last month for a 15 days stay to return before any newer restrictions or case-spikes. 15 days in the lap of Thamirabarani! Actually if we look back, it's a journey we've made countless times so spontaneously. A 600Kms distance that can be crossed between 5am-4pm any day via NH44. The journey was an inviting package - Enjoying the early morning mist and chills of Bengaluru, sparkling at the first Tamil name board we see at the border, stopping at our usual highway restaurants for refreshments, giving water, snack and a small walk for Rocky at these stops...countless memorable drives this way. The music that travels along with us in the car, the hills on either side of the highway in Dharmapuri, the estimate to reach Salem in 5 hours, that elation at the first glimpse of Ghats in Dindigul after Karur, Namakkal as if Kodaikanal was right in front, that native fragrance once we touch Madurai, recollecting college journeys while crossing Sathur & Kovilpatti and finally that joy when we cross Kayathar as home was just around the corner! It's a guaranteed wholesome package every single time!

Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature
தர்மபுரி நெடுஞ்சாலை மலைகள் Dharmapuri stretch of the highway

ஆனால் கடந்த இருமுறையும் எந்த உணவகத்திலும் நிறுத்தம் கிடையாது. வீட்டிலிருந்தே பேக் செய்து கொண்டு வந்த உணவு, அங்கங்கு ஏதேனும் புது கட்டுப்பாடுகள் விதித்து விடுவார்களோ என்ற லேசான பதட்டம், எல்லாவற்றுக்கும் மேலாக ஆளுக்கு இரண்டு முகக்கவசங்கள், கைகளில் அவ்வப்பொழுது கிருமிநாசினி உபயோகிப்பு, இருந்தாலும் குறையவில்லை எங்கள் உள்ளப் பரபரப்பு. இந்த முறை ஊரும் வீடும் இன்னும் ஸ்பெஷலாகத்தான் தெரிந்தது… காத்திருந்து, அரிதாகக் கிடைக்கும் எதுவும்  விசேஷம் தானே!     

But the last two travels have been slightly different. No stops for restaurants, only home cooked food, a slight anxiety about any new restrictions as we crossed different zones, double masks adorning all of us, hand sanitizers every now and then. Yet the excitement couldn't be dampened. This time home town and home seemed even more special... The long wait and longing made it so!

சோறு முக்கியம் பாஸ்! Put more chutney! 😀

ஊரும் சாப்பாடும் நகமும் சதையும் மாதிரி! கோவிட்டும் கோவிஷீல்டும் மாதிரின்னு கூட வச்சுக்கலாம். சிட்டுவேஷன்க்கு பாந்தமா பொருந்தும்.  நிற்க. பெங்களூர்ல ஒண்ணும் காஞ்சு கெடக்கல, ஆனாலும் நாங்க சோத்துக்கு மரியாத அதுவும் மொத மரியாத தர்ற சங்கம். பெறவு!தின்னவேலிக்காரங்கன்னா சும்மாவா ?! யே, நல்ல சூடு இட்லி புதுசா திரிச்ச மொளாப்பொடியவே ஃபைவ் ஸ்டார் பஃபே ரேஞ்சுக்கு கட்டு கட்டுத கோஷ்டி, ஊர் ஸ்பெஷல் ஐட்டம்லாம் ச்சும்மா வ்ளாடிருவோம்லா!  வாங்க, செத்த வெவரமா பேசுவோம். ஏம்னு கேட்டியள்னா, இதுல ருசியும் இருக்கு வலுவும் இருக்குல்லா!

Well, home town and food are two sides of the same coin. More like covid and covishield, tightly paired. Though we were no close to deprived nor starved in Bengaluru, when it comes to native, food is an inseparable component. Especially when one belongs to the live-to-eat foodies club. People like me can write a book about the humble hot-idli and the freshly ground idli-podi, so imagine how we'd relish the special local delicacies! The day begins, sails and ends with what to eat next😄 Let's discuss this in detail as the matter encompasses both taste and wellness.

பி.கு: இந்த பதிவில் உணவு குறித்த அனைத்து  புகைப்படங்களும் மெருகேற்றப்படாமல் அந்த நொடி வீட்டில் சமைக்கும்/பரிமாறும் பொழுது எடுக்கப்பட்டவை. எனவே கண்ணை வெகுவாகக் கவராத/கவரக்கூடிய  அன்றாட எளிமையை பின்னணியில் உணரலாம்.🙂  

PS: The food pics throughout this post were taken as-is while cooking or serving at home. Attention wasn't paid in presenting them at food-photography level. Hence please ignore/admire the homely simple and lackluster cutlery and background . 🙂

பானங்களும் பண்டங்களும் Health Drinks and Snacks


Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
இது என்னன்னு தெரியுதா?  Can you identify this?

சிலர் பனை ஓலையை வச்சு இது என்னன்னு கண்டுபிடிக்கலாம். நெறைய பேர்க்கு தெரியாது, குறிப்பா சிட்டில பிறந்து வளர்ந்த மக்களுக்கு. பதநீர்/பதனி/இதை விக்கிற வியாபாரிகளுக்கு "பய்னி! பய்னி!"
பனை மரத்தின் பாளைகளிலிருந்து கிடைக்கும் இந்த நீரில் இனிப்பான சுவையும், உடலைக் குளிர்விக்கும் தன்மை, கால்சியம் சத்து, உடல் சோர்வினை நீக்கும் தன்மை போன்ற ஏராளமான  நற்பலன்களும் ஒளிந்திருக்கின்றன. இந்த Palm tree juiceம், அதை பனை மட்டையில் ஊற்றிகுடித்த அனுபவமும் எங்கள் வீட்டு சிறுசுகளுக்கு rare and exotic அனுபவம். பாக்கப்போனா கடல் கடந்து ஒண்ணும் வாழலை. ஆனா, இந்த மாதிரி நம்மூர்களுக்கே உரித்தான பாரம்பரிய அனுபவங்களை நாமளும் regularஆ அனுபவிக்கறதில்ல, நம்ம பிள்ளைகளுக்கும் எடுத்துக்காட்டறதில்லை. இனிமேலாவது இந்த விஷயத்துல கவனம் செலுத்தணும். (Hello, நாங்கள்ளாம் அப்படி இல்லங்கறீங்களா?  நான் என்னத்தான் சொல்றேன்) 

Those who have grown up in palm tree regions might identify the above drink. But for many others it might be new. This is Neera - Palm tree water, a secretion from Palmyra. Sweet to taste and loaded with nutrients like Calcium, it is a stamina building coolant that can cure many heat related disorders when taken as it is or with herbal accompaniments like turmeric. Drinking this in those palm leaf cups was an exotic experience for the kids of our family.

Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
திருநெல்வேலி அல்வா Tirunelveli Halwa

வீட்டுக்குள்ள அடி எடுத்து வச்ச உடனே வாய்ல போடுற முதல் ஐட்டம் - அல்வா. The name is அல்வா, திருநெல்வேலி அல்வா! அப்டின்னு James Bond ரேஞ்சுக்கு intro குடுக்கலாம். அப்டியே கோதுமையும், நெய்யும், முந்திரிப்பருப்பும் சேர்ந்து வழுக்கிகிட்டு தொண்டைக்குள்ள glide ஆகற அனுபவம் one of the must-have experiences in life! இருட்டு கடை, சாந்தி ஸ்வீட்ஸ், லட்சுமி விலாஸ்  இவங்க தான் காலம் தொட்டு அல்வா வாங்க சிறந்த விற்பனையாளர்கள். இப்ப இன்னும் நெறைய கடைகளும் brandகளும் வந்திருக்கு, in fact பல்வேறு நாடுகளுக்கும் டெலிவரி பண்ற புது vendors-ம் onlineல பாக்க முடியுது. நீங்க திருநெல்வேலிக்கு புதுசுன்னா, வாய்ப்பு கிடைத்தால் மேற்சொன்ன மூணு கடைகள்ல வாங்கறது, பாரம்பரிய சுவை கொடுக்கற அனுபவமா இருக்கும். இந்த அல்வா, மென்மையான கடலை மாவு பர்பி, மிக்சர், தேங்குழல், கைச்சுத்து முறுக்கு, கலயமிட்டாய், பொரிவிளங்காய் /நெய்யுருண்டை, திருப்பாகம், திரட்டுப்பால், காராசேவு, ஓமப்பொடி இதெல்லாம் நெல்லை ஸ்பெஷல் தின்பண்டங்கள். அதுல பாருங்க, இந்த சாயந்திர காப்பிக்கு கொஞ்சம் அல்வா, பக்கத்துல மிக்சர். ஒரு சின்ன உருண்டை அல்வாவ எடுத்து அப்படியே மிக்சர்ல ஒரு பெரட்டு பெரட்டி வாய்ல போட்டு அப்பறம் காப்பி குடுச்சா…அதெல்லாம் ஒரு தனி லெவல்!

The first snack that goes into my mouth after stepping inside the house is Halwa. It's worth a Bond movie introduction like "The name is Halwa, Tirunelveli Halwa". The silky smooth glide of this heavenly mix of wheat flour, ghee and cashews from the mouth to throat is one of the must-have experiences of life! Iruttu Kadai, Shanthi Sweets, Lakshmi Vilas these are the three traditional vendors famous for the authentic taste of the Halwa. Recently many more new brands have also been established and some of them are even delivering these specialties abroad. If you are new to Nellai and if you get a chance, buying from one of the three above mentioned shops would give an authentic tasting experience. This Halwa, super-soft melt-in-the-mouth gram flour Barfies, Kalayamittai(a Jalebi like sweet made with palm jaggery), Thiruppagam (gram flour and badam based sweet), Therattupaal (khoya based sweet), Porivilangai/Neyyurundai (Fried gram laddu), Karasev, Omapodi, Mixture (all three are gram flour based savories), Thaenkuzhal (mould-made rice and urad flour chakli), Kaichuthu Murukku ( hand-made rice and urad flour chakli) are few of the Nellai special snack items. Especially, for evening coffee (yes! the filter coffee) have a serving of mixture and halwa. Take a small piece of halwa, roll it on the mixture, relish and take a sip of the coffee. Decadence.

சரி, ஸ்வீட் காரம் பத்தி ரொம்ப பேசியாச்சு. வாங்க, சில ஆரோக்கியமான பானங்களை பார்ப்போம். எங்க பள்ளி பருவத்தில அதிக எண்ணெய்  பலகாரம் சாப்பிட்டாலோ, இல்ல ஹெவியான விருந்து சாப்பாடு மாதிரி சாப்பிட்டாலோ, இல்ல பொதுவாவே ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை அந்த வார விடுமுறை அன்னிக்கி காலைல வெறும் வயித்துல இஞ்சி காப்பி குடிக்கிற வழக்கம் இருந்தது. கொத்தமல்லி விதை, இஞ்சி ரெண்டும் நெறைய சேத்து அரைச்சு, சாறு எடுத்து அதை அப்படியேவோ அல்லது வெல்லப்பாகு + கொஞ்சம் பாலோட சேத்தோ குடிக்க தருவாங்க. மல்லியும் இஞ்சியும் நல்லா வயிற்றை கிளீன் பண்ணி விட்ரும். எண்ணெய் மக்கு எல்லாம் அறவே போய் 1-2 மணி நேரம் கழிச்சு நல்லா பசியெடுக்கும். Regular servicing for the digestive system. இப்ப இதை என்னிக்காவது ஞாபகம் வந்தா பண்றோம். ஆனா கடந்த சில வருஷங்களா, இன்னொரு பானகத்தை தினமுமே காலை வெறும் வயிற்றில் குடிக்கறோம். அது தான் கீழே படத்தில் உள்ளது . 

Ok, enough written about the sweets and savories. Let's see some health drinks. In our school days whenever we had few days of heavy food at a stretch or even generally once in two weeks we used to be given ginger-coffee on a weekend morning in empty stomach. Made out of the extract of generous amounts of ginger and coriander seeds this extract was either had as such (in which case the ginger-heat was higher and hence the cleansing effect was more) or with little milk and jaggery mixed. Having it on an empty stomach effectively cleansed all the grease within, inducing hunger in the next 1-2 hours. Regular servicing for the digestive system. Now, we make this only when we remember. But there's another drink that we take daily on empty stomach. Made it a habit especially over these pandemic years as the ingredients are immunity boosters also.

Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
ஜீரகம் இஞ்சி நெல்லிக்காய்/எலுமிச்சை தண்ணி Cumin Ginger Amla/Lemon water

இது காலைல வெறும் வயத்துல குடிக்க சிறந்த பானகம். முந்தின இரவு காய்ச்சி வச்சுட்டா மறுநாள் காலை எழுந்த உடன் குடிச்சிரலாம். கொதிக்கிற தண்ணில ஜீரகம், வெந்தயம், இஞ்சி தட்டி போட்டு கூடவே பெரிய நெல்லிக்காய் விழுதோ இல்ல எலுமிச்சைய தோலோடயோ சேர்த்து வெல்லம் போட்டு நல்லா கொதிக்க விட்டு இறக்கி மூடி வச்சுட்டா அந்த சாறு எல்லாம் தண்ணில நல்லா இறங்கி மறுநாள் காலை அருந்த ஆரோக்கியமான பானகம் ரெடி. இதுல விசேஷம் என்னன்னா, ஊர்ல இந்த தண்ணீர் காய்ச்சும் போது உபயோகப்படுத்தற Chemical free  பெரிய நெல்லிக்காய் வீட்டுல காய்ச்சது. 

This panagam(light health drink which usually has jaggery) is an easy to make healthy one which can be made previous night so as to drink the next morning on empty stomach. To boiling water add coarsely crushed cumin, fenugreek, ginger. To this add blended goose berries or squeezed lemon(include the rind as well) and jaggery. Let this all boil for few mins and then remove from heat, cover with lid. All the essences will mix well overnight and the drink is ready next morning. What is special while making this in our native is that the goose berries added in this are chemical-free-home-grown.

Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
Herbal ingredients that can be added to Dry ginger concoction. சுக்கு வெந்நீரில் சேர்க்கப்படக்கூடிய மூலிகை பொருட்கள். 1 - Athimathuram (Licorice root); 2 - Chitharathai (Lesser Galangal); 3 - Chukku (Dry Ginger); 4 - Thippili (Long Pepper); 5 - Aadathodai(Malabar nut) leaf powder 

சுக்கு வெந்நீர் இன்னொரு ஆல்-இன்-ஆல் ஆரோக்கிய ராணி. இதுல சேக்கறதுக்கு பெரிய லிஸ்டே இருக்கு, இருந்தாலும் குறைந்தபட்சம் நற்பலனுக்கு கண்டிப்பாக சேர்க்க வேண்டியவை -  பொடித்த/தட்டிய சுக்கு, கொத்தமல்லி விதைகள், மிளகு, கிள்ளிப் போடப்பட்ட  துளசி/வெற்றிலை இலைகள், கருப்பட்டி/வெல்லம்/நாட்டு சர்க்கரை. இந்த முறை மாமியார் முன்னேற்பாட்டால கூடுதலாக அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி, ஆடாதொடை இலைப்பொடி இதெல்லாமும் சேர்ந்துருச்சு. நமது பாரம்பரிய நாட்டு/சித்த மருத்துவத்தில் இந்த பொருட்களுக்கெல்லாம் முக்கிய இடமுண்டு.  

Dry ginger concoction is another all-in-all health drink. One solution for many problems like cold, throat infection, fever, exhaustion, indigestion etc. There is a big list of items that can go into making this drink but for the minimum guaranteed health benefits, following items should be added to boiling water and let it reduce with all the essences mixing well - crushed/powdered Dry ginger, Coriander seeds, Pepper corns, chopped Tulsi/Betel leaves, Palm jaggery/Jaggery/Brown sugar. This time as mom-in-law had already purchased, we had the opportunity to add Licorice root, Lesser galangal, Long pepper, Malabar nut leaves powder also to it. All these ingredients hold a significant place in our traditional Siddha medicine. This drink is best had hot.

சாப்பாடு Main course

இப்ப கச்சேரி இன்னும் களைகட்டும். தென்னிந்தியாவிற்கு அப்பாற்பட்ட என்னுடைய பல நண்பர்களுக்கு, தென்னிந்திய சாப்பாடுன்னா அலாதி பிரியம். ஆனா அவங்களுக்கு குறிப்பிட்டாப்ல சாம்பார், ரசம், புளியோதரை, ஆந்திரா மீல்ஸ், மசாலா தோசை மற்றும் ஒரு சில அசைவ உணவுகள் தான் பரிச்சயம். இதுல ஆச்சரியப்படறதுக்கு ஒண்ணும் இல்லை. ஏன்னா, தென்னிந்தியாவுல பிறந்து வளர்ந்த நமக்கே இன்னும் தெரிஞ்சுக்க எவ்வளவோ வட்டார உணவு வகைகள் இருக்கு. மற்ற திசை உணவு வகைகள் நமக்கும் வெகு சிலதே பரிச்சயம். அந்த வகையில், இந்த முறை எங்கள் இல்லங்களில் சமைக்கப்பட்ட சில குறிப்பிட்ட வட்டார உணவு வகைகளை பார்ப்போம்.

Onto the more taste bud-tickling part now. Many of my friends who are from outside of South India are big fans of South Indian food. But they are familiar only with the few popular dishes like Sambar, Rasam, Puliyogare, Masala Dosa, Andhra meals and few non-vegetarian items. This is not surprising because as a South Indian, I am yet to know the multi-numerous zonal delicacies myself and same is my level of familiarity with the cuisines from all other directions. In this regard, I share few specific local dishes that we cooked at our homes during this stay.

Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
நெல்லை வட்டார சாம்பார் அவியல் தொடு பருப்பு Nellai version of Sambar Aviyal Dal

என்ன, பெரிய பீடிகை குடுத்துட்டு சாம்பார் அவியல தான காமிக்கறேன்னு பாக்கறீங்களா ?! தெற்குலயே பொதுவா சாம்பார் பலவகை.கர்நாடகால லேசா இனிப்பு போட்ட சாம்பார், ஆந்திரால புளிப்பும் ஒரப்புமா கீரை மிளகாய்-வத்தல் சேர்த்து தாளித்த சாம்பார், கேரளா சாம்பார் இப்படி இடத்துக்கொரு செய்முறை.  அதுல தமிழ்நாட்டு சாம்பார் இன்னும் பல வட்டார வகை. துவரம் பருப்புல செய்த சாம்பார், சிறு பருப்புல செய்த சாம்பார், தேங்காய் அரைச்சு போட்ட சாம்பார், தேங்காய் சேர்க்காத சாம்பார், சாதத்துக்கு ஒரு வகை சாம்பார், இட்லி தோசைக்கு வேற வகை சாம்பார்,பூரி ஆப்பத்துக்கு தனி வகை சாம்பார்-னு ரக வாரியா புகுந்து வெளையாடிருக்கோம். சாம்பார் பொடி தயாரிக்கும் முறையும், அதுல சேரும் பொருட்களுமே சில இடங்களில் வேறுபடும். நெல்லை வட்டார சாம்பார்ல என்ன தனித்துவம்னா, இதுல துவரம் பருப்பு தான் அடித்தளம். மேலும் புளி, சாம்பார் பொடி, காய்கறிகள் எல்லாம் சேர்ந்து வெந்து கொதிக்கும் போது இதுல துருவிய தேங்காய்-சிறிதளவு  சீரகம்- ரெண்டு பூண்டு பல்- ரெண்டு துண்டு வெங்காயம் ஒண்ணா அரைச்சு சேர்ப்போம். பொதுவா தமிழ்நாட்டு சாம்பார்ல எல்லா இடங்களிலுமே வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய் போடும் வழக்கம் உண்டு. கர்நாடகால வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர் காய்களையும் சேர்ப்பார்கள். விசேஷ நாள்னா வீட்டு சாம்பார்ல எப்படியாவது கத்திரி, முருங்கை, வெண்டை, சின்ன வெங்காயம் இதோடு கூட மாங்காயும் சேர்ந்துரும். துணைக்கு கட்டாயம் அவியலும், நெய் போட்டு தனியா சாப்பிடக்கூடிய தொடு பருப்பும், வத்தல் அப்பளமும் ஆஜர். இதுக்கு பின்னாடி லைனா வர்ற ரசம், பச்சடி, பாயாசம் எல்லாம் அப்பறம். அவியலும் சாம்பார் போலவே ஒரு உருமாறி. இடத்துக்கு இடம் காய்கறிகள் வேறுபடும். நெல்லை வட்டாரத்துல பெரும்பாலும் நீர் காய் அல்லாத காய்களே சேரும். வாழைக்காய், முருங்கை, கத்திரி, கேரட், உருளை, சிறு கிழங்கு, பீன்ஸ், அவரை இந்த மாதிரி. மேலும், வண்ணம் வெளிர் நிறமாக மஞ்சள் பொடி சேர்க்கப்படாமலே இருக்கும். தமிழகத்தின் சில இடங்களிலும் வேறு மாநிலங்களிலும் நீர் காய்கள் சேர்க்கப்படுவதையும் சுவைத்திருக்கிறேன். அங்கு மஞ்சள் பொடியும் சேர்க்கிறார்கள். 

After a big talk, I am starting with the quite popular Sambar itself. Got a reason for it. As it is, in South there are multiple versions of the Sambar in each state. The slightly sweet Karnataka Sambar, the tangy hot Andhra sambar which has spinach leaves and tempered red chillies in it, mixed-veg Kerala Sambar so on and so forth. Each place has its own customization. Now in Tamilnadu it further varies based on each zone's local cuisine. Toor dal based, Moong dal based, with/without coconut paste, one type for rice, another type for idli/dosa, another type for Puri and Appams...one can keep going as folks have unleashed their full creativity and played with this ubiquitous staple. Generally in TN the veggies that go in sambar are ladies finger, brinjal, drumstick, sambar onion.  On special occasions it will be ensured that raw mango is also added. In Karnataka I have also tasted Sambar where veggies with water content like cucumbers, ridge gourds are also added. Aviyal, thick version of boiled Toor dal which could be eaten with rice and ghee, rice-fritters and papad are mandatory accompaniments. The rasam, pachadi, payasam etc that line up after this are separate. Coming to Aviyal, this is also a shape-shifter. The vegetables that go in it vary from place to place. Around Tirunelveli, mostly non-water-veggies like raw banana, carrot, beans, potato, brinjal, drum stick, types of yam are added. Also, the colour of aviyal would be mostly grey-white that of the natural colors of the vegetables with the thick coconut paste. In some places of Tamilnadu and also in other states I have tasted Aviyal with water-veggies also added. The colour is also yellowish with the addition of Turmeric.

Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
சொதி நேந்திரன் சிப்ஸ் உருளை வறுவல் இஞ்சி பச்சடி Sodhi Nendran chips Potato fry Ginger Pachadi
 திருநெல்வேலியப் பத்தி எழுதும்போது சொதிய விட முடியுமா?! விருந்துக்கு, முக்கியமா வீட்டு மாப்பிள்ளை வர்ற விருந்துக்கு கட்டாயம் இதை செய்யறதால இதுக்கு மாப்பிள்ளை சொதின்னே ஒரு பேர் உண்டு. அப்ப, ரெண்டு மருமகன்களும் வீட்டுக்கு வந்திருக்கும் போது அம்மா இதை செய்யாம இருக்கவே மாட்டாங்கள்ல! தாய்லாந்து நாட்டு தாய் ரெட் கரி, எல்லோ கரி எப்படி பிரபலமோ அப்படிதான் நெல்லை வைட் கரியான சொதியும். முழுக்க முழுக்க தேங்காய் பால், கொஞ்சம் சிறு பருப்பு, அதோட எல்லா காய்கறிகளும் சேர்த்து தயார் செய்யப்படறதால இதை சாப்பிட்டபின் மிகவும் ஹெவியாக உணர்வோம். தொடுகைக்கு உருளை அல்லது நேந்திரன் சிப்ஸ், உருளைக்கிழங்கு அல்லது எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் சேருவதால் கூடுதல் ஹெவி. இதெல்லாம் ஜீரணமாக, கூடவே இஞ்சி பச்சடி கட்டாயம். Actually, இஞ்சி பச்சடி தான் சொதிக்கு சரியான எதிர் இணை. சபாஷ்! சரியான போட்டிங்கற மாதிரி. 

One cannot skip Sodhi while writing about Tirunelveli. If it is a feast, especially when son-in-law visits, Sodhi will certainly be made. This gave the dish the prefix of Maappillai-Sodhi (Maappillai = Son-in-law). So, when both the sons-in-law visit, there is no way my mom misses preparing this right! Just like the renowned Thai red and yellow curries, this white curry of Tirunelveli also has a complete coconut base. It is fully made out of coconut milk, small quantity of boiled moong dal in which all the vegetables are cooked. This makes the meal very heavy after eating. The accompaniments like potato/nendran chips, potato/brinjal deep fry add to the heaviness. To counter all this and aid in digestion Ginger pachadi is made. Actually ginger pachadi is the most apt accompaniment for Sodhi. Adds that zing to the feast.

Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
உளுந்தம் பருப்பு சாதம் Urad Dal Rice

நெல்லைக்கே உரித்தான இன்னொரு முக்கியமான சாப்பாட்டுக்கு வருவோம். மேல படத்துல இலையை பாருங்க. இது முழுக்க முழுக்க பிரத்தியேக வட்டார சுவையும், அளப்பறியா நன்மைகளும் தரக்கூடிய ஒரு complete மீல்ஸ். இதுல இன்னொரு இன்டெரெஸ்ட்டிங் மேட்டர் என்னன்னா வாழை இலையோட சேர்த்து அத்தனையும் வீட்டு தயாரிப்பு 😊 
மேல் இ-வ: தண்ணி வத்தல்-கெட்டி வத்தல்-அடியில் ஒளிந்திருப்பது வெங்காய வடகம்-சுண்டக்காய் வத்தல் , கத்திரிக்காய் வாழைக்காய் பொரியல், எள்ளு துவையல், வெண்டைக்காய் பச்சடி. கீழே ராயலாக உனா-பனா (short form for உளுந்தம் பருப்பு சாதம்) . இந்த உளுந்தம் பருப்பு சாதம், அரிசியோடு முழு உளுந்தையும் (தோல் உள்ளது) பூண்டு, வெந்தயம், தேங்காய் துருவல் சேர்த்து சமைக்கப்படுவது. பொதுவாகவே தமிழ்நாடு, ஆந்திரா இந்த ரெண்டு மாநிலங்கள்ல உளுந்து உபயோகம் அதிகம் பார்க்கலாம். உளுந்து எலும்புகளுக்கு மிகவும் வலு சேர்க்கக்கூடிய பருப்பு. முக்கியமா நம்ம ஊர்கள்ல உளுந்து நிறைந்த உணவுகளை பெண் குழந்தைகளுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் குடுக்கறத நாம அறிந்திருப்போம். பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்கு வாடிக்கையா உளுந்தங் களி, உளுந்த வடை, உளுந்தங்கஞ்சி எல்லாம் குடுப்பாங்க. நம்ம ஊர் ஜாங்கிரி கூட உளுந்தமாவுல செய்ரது தானே.இந்த சாதத்துக்கு பெஸ்ட் காம்பினேஷன் எள்ளு துவையல், மேலே உள்ள காய்கறிகள். எள்ளும் ஒரு  health power-house. இரும்பு சத்து, ஹீமோகுளோபின் அதிகரிப்பு, உடல்வலு அதிகரிப்புன்னு எள்ளு செய்யாத வேலை இல்லை. இதே சாதம் மிஞ்சினா அதுல தண்ணி ஊத்தி வச்சு, அடுத்த நாள் மோர், சின்ன வெங்காயத்தோட சேத்து கஞ்சி மாதிரி குடிச்சா, சும்மா குற்றால சாரல் அடிச்ச மாதிரி உடம்பு ஜில்லுன்னு கூலாயிடும். இதெல்லாம் வெயிலோட வெளயாடற ஊர்க்காரங்க உடல்சூடு தணிக்க பண்ற சின்ன-சின்ன பக்க-விளைவே இல்லாத டெக்னிக்ஸ்.     

The picture above shows another lunch that is exclusive to Nellai region. Look at the banana leaf menu above. This is end-end loaded with regional flavor and packed with immeasurable wellness. Another interesting trivia here - every item there including the banana leaf is home-made 😊
Top L-R: Thin rice fryums-thick rice fryums-hidden underneath are onion fryums-turkey berry fryums, brinjal-raw banana stir fry, black sesame seeds chutney, ladies finger pachadi. In the bottom half of the leaf, sitting royally, is the Urad dal rice. This is prepared by cooking rice, full urad (one with skin), garlic cloves, fenugreek seeds and grated coconut together. Generally, once can notice the prevalent usage of  urad in states like TN, Andhra. Urad is a legume that significantly helps in making bones stronger, adding to bone density and overall stamina. This legume is regularly given to girl children of puberty age and also to the new-mothers to aid in stamina recovery. Urad vada, urad-gingelly oil halwa, boiled urad stew are regularly consumed food items in these regions. Even the Jangiri (sweet that resembles softer version of Jalebi) is made out of Urad batter. The best side-dish for Urad dal rice is the black sesame seeds chutney. Sesame itself is a power house of health. Loaded with iron, hemoglobin boosting, stamina boosting abilities there is no magic that sesame doesn't do. Apart from this chutney the vegetable accompaniments shown above complement both the taste and overall nutritive value of the total meal. If this rice is left over, it is left to ferment with water and the next day consumed with buttermilk and bites of sambar onion. This kanji/porridge itself is a great coolant, like the monsoon winds of Kutralam. People here usually take this porridge in the morning, before stepping out for the day under the unforgiving sun. 

காலை மாலை டிபன் Breakfast and Dinner

இது பொதுவாகவே எல்லா இடங்களிலும் செய்ற மாதிரி இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், அடை, ஆப்பம், இடியாப்பம் போன்ற ஐட்டங்கள் தான். ஆனா தோசைல சிறு தானிய தோசைகள் அடிக்கடி இடம்பெறும். கம்பு தோசை, சோள தோசை, கேழ்வரகு தோசை, கொள்ளு தோசை, முழு உளுந்து  தோசை போன்றவை. இப்ப மதிய உணவுக்குமே நெறைய வீடுகள்ல வெள்ளை அரிசிக்கு பதிலா கைக்குத்தல் அரிசி இல்ல சிறுதானிய அரிசிகளை பாக்க முடியுது. இது மிகுந்த வரவேற்பிற்குரியது. 

Breakfast and dinner consist mostly of the commonly consumed foods like idli, dosai, upma, Pongal, adai, appam, idiyappam. But in dosai a variety of millet dosais are made - Pearl millet dosai, Sorghum dosai, finger millet dosai, horse gram dosai, black gram(full urad) dosai etc. Over the last few years polished rice is steadily being replaced in many house holds with millet-rice like foxtail, kodo, little and barnyard millets. This is a very welcome change as millets are significantly much healthier than polished white rice.

Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
ஆப்பம் கேரள ஸ்டைல் கடலைகரி. நெல்லைல பொதுவா ஆப்பத்துக்கு தேங்காய் பால்-சீனி (அ) தேங்காய் சட்னி சிறுபருப்பு சாம்பார் . Appam Kerala style Kadala curry. In Nellai Appam is usually eaten with sweetened coconut milk or coconut chutney and Moong dal sambar
   
Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
கார இடியாப்பம் இனிப்பு இடியாப்பம். Idiyappam/String hoppers. Left: savory lemon string hoppers Right: sugar grated-coconut and ghee added sweet version

Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
சம்பா அரிசி புட்டு பழம் பால் - எங்கள் Onam 2021 இரவு உணவு. சம்பா அரிசி புட்டு மிகுந்த நன்மை சேர்க்கும் உணவு. Red rice puttu, banana and milk - our dinner on the night of Onam 2021. Red rice puttu is a very healthy and light food.

ஒரு தடவ செஞ்சா ஒரு வருஷத்துக்கு செய்த மாதிரி!  Home preparations for long term usage

தொடர்வதுக்கு முன்னாடி, சுமார் முப்பது வருஷத்துக்கு முந்தைய பிளாஷ் பேக். 1980s-90s. பள்ளிப்பருவ கோடை விடுமுறை நாட்கள். வெளுத்தெடுக்கற வெயிலையும், வீட்டுல வெட்டியா இருக்கற பொடுசுகளையும் சரியா உபயோகிச்சு ஒரு வருஷத்துக்கு தேவையான சில ருசிகரமான விஷயங்கள தயாரிச்சு வச்சுக்கறதுக்கு பேர் - கூழ் வத்தல் திருவிழா!

திருநெல்வேலி டவுன் ஏரியா பரிச்சயமானவங்களுக்கு, அங்க இருக்கற தட்டட்டிகள்(மொட்டைமாடிகள்)  முக்கியமா ரெண்டு விஷயத்துக்கு யூஸ் ஆகும்னு தெரியும் - 
1. சாயங்காலமானா அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரங்க எல்லாரும் மேல வந்து அரட்டை கச்சேரி நடத்த.
2. வத்தல் வடகம் போட .  

Before we continue, a flash back of more than 30 years. 1980s-90s school summer vacations.
Scorching sun and a house full of idling young guns - an event puts both these to best use resulting in the making of edible reusables that last at least a year.  That's the Fryums Fiesta! 

Those familiar with the Nellai-Town area know that the terraces in this densely populated old charm locality mainly serve two purposes - 
1. Neighbors to socialize in the evenings when mercury drops to a pleasant level
2. To dry the home-made fryums

அப்பல்லாம், ஏப்ரல் மே ஆச்சுன்னா ஆச்சி வீட்டுல குறைஞ்சது 20 பேராவது இருப்போம். எடு பித்தளை அண்டாவையும் துடுப்பையும்! காய்ச்சு கூழை-ன்னு ஆச்சிகள், பெரியம்மா அம்மா அத்தை சித்திகள் ஆரம்பிச்சிருவாங்க. வத்தல் எத்தனை நாள் போடணும், எவ்வளவு போடணும், என்னென்ன வெரைட்டி போடணும்னு பிளானிங்லேந்து முந்தைய நாள் மாலை மாவு அரைக்கறது, தட்டட்டிய தூத்து(பெருக்கி) கழுவி சுத்தம் பண்றது, வத்தலுக்குன்னே ப்ரத்யேகமா வச்சிருக்கிற வேட்டி துணிகளை எடுத்துவைக்கிறதுன்னு  வீடு விழாக்கோலம் பூணத் தொடங்கும்.  இதுல பக்கத்து வீட்டு அத்தை, பின் வீட்டு அக்கா இவங்களோட எல்லாம் கலந்தாலோசிச்சு கஸ்டமைசேஷன் வேற உண்டு. நடக்கும் எல்லா விதமான வேலைகளுக்கும் நாங்கள்லாம் எடுபிடிகள்.  

Back in those vacations, min 20 of us used to be present in our grand ma's home. So the big ladies would kick start the fryums mela with no second thoughts. How much to make, how long it would take, what all variety etc. etc. From planning, cleaning the terrace, grinding the batter to retrieving the exclusive dhoti cloth materials from the store room... full house will get into action! Add to this the huddles with the next door aunty and the back door sister for customization. For the countless molecular tasks that needed running around, the kids army was promptly summoned. 

வத்தல் போடும் தினம், அதிகாலை 4 மணிக்கே ஆச்சி எழுந்து மாவை கூழாகக் கிண்ட ஆரம்பித்து விடுவாள். அடுத்தடுத்து வீட்டு மூத்த பெண்மணிகள் எல்லாரும் எழுந்து ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கிண்டுவதிலும், நறுக்கிய சின்ன வெங்காயம், அரைத்த பச்சை மிளகாய், ஜீரகம் போன்ற  மேற்படி சாமான்கள் சேர்ப்பதிலும் கை கொடுப்பார்கள். அளவு அதிகம் என்பதால் கூழை கிண்டி ரெடி செய்ய 2-3 பேர் இன்சார்ஜ் எடுப்பார்கள். 5-5:30 மணிக்குள் ரெடியாகிவிடும் கூழை வத்தலாக மொட்டை மாடியில் வேட்டித்துணிகளில் இடவேண்டும். கட்டி வத்தல் வெங்காய வடகம் என்றால் கையாலேயே இடுவது, தண்ணி/ஜவ்வரிசி வத்தல் என்றால் கரண்டியால், தேங்குழல் வத்தல் என்றால்  அச்சை வைத்து , இப்படி  ஓவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செய்முறை. வத்தல் இடுவதில் சித்திகளுக்கு பெரிய பொறுப்பு.  காலியாகும் பாத்திரங்களை மீண்டும் நிரப்புவது,  துணிகளை விரித்து காற்றில் பறக்காமலிருக்க எல்லா புறமும் கல் வைப்பது,  எங்களுக்கென்று துணியில் ஒதுக்கப்பட்ட சிறு மூலைகளில் வத்தல் போட்டு பழகுவது, அந்த சாக்குல கிண்ணமா கிண்ணமா கூழை கபளீகரம் பண்றது  இதுவெல்லாம் அடிபொடிகளின் Roles & Responsibilities. 

On the day of preparing the fryums, grand-ma used to get up as early as 4am. She will begin with 
pouring the rice batter ground the previous evening, into a huge brass vessel placed on a wood fired stove and stirring it with a long and sturdy wooden ladle. After her, the other elderly ladies like mom, aunties would take turns to stir and also add toppings like cumin, chopped small onions, blended green chillies to the porridge once it reaches the right consistency. As the quantity was large, 2-3 of them would take charge of this step. The porridge would get ready by 5-5:30am post which it would be split into multiple smaller vessels for cooling and taken to the terrace for laying on the cloth. If it is thick-fryums then they have to shaped with hands, thin-fryums can be poured using spoons, chakli-shaped-fryums have to be pressed using mould etc., for each variety its own methodology. Younger aunties did a large portion of this shaping. Refilling the emptied vessels, spreading the cloth materials and placing weights on all corners to prevent them from folding in air, practicing to lay the fryums in those small corners assigned for us and in that process gobbling the porridge...these were the Roles & Responsibilities of us minions.

யார் தட்டட்டியில் என்ன வத்தல் காய்கிறது, எவ்வளவு காய்கிறது என்ற கணக்கெடுப்பெல்லாம் முடிந்து, பரஸ்பரம் குசலம் விசாரித்து,  இப்படியாக காலை 8-8:30 மணிக்குள் வெயில் ஏறும் முன்பே அன்றைய வத்தல் சோலி முடிந்துவிடும். கீழே இறங்கிய பின் அந்த நாளில், நடு நடுவே மீண்டும் தட்டட்டிக்கு ஏறி காக்கை விரட்ட செல்வது எங்கள் சீர்மிகு சிறுசுகள் Gang 💪. காக்காய் விரட்ட போன காக்காய்கள் சீக்கிரம் கீழே இறங்கவில்லை என்றால், அங்கே பாதி காய்ந்தும் காயாமலுமாய் தனி சுவையுடன் இருக்கும் வத்தல்கள் வாண்டுகளின் பொத்தைக்குள் போய்க்கொண்டு இருக்கின்றன என்று அர்த்தம் 😄 

By 8-8:30am before the ascend of sun, not only that day's batch of fryums would have been laid but also a round of surveying neighboring terraces to know whose made what, how much, what type and exchanging morning pleasantries all would have been accomplished. Once everyone got down, it was the prestigious duty of the "Army" to keep an intermittent watch of the terrace through the day to protect the treasure from crows 💪. And if the crows who went to check for crows were long gone, that meant the uniquely delightful half-dried fryums were being silently devoured 😄

மாலை வெயில் மங்கியவுடன் துணிகளை வீட்டுக்குள் கொணர்ந்து, அவற்றின் பின்புறம் லேசாக தண்ணீர் தெளித்து, உலர்ந்த வத்தல்களை வேட்டித்துணிகளிலிருந்து பிரித்தெடுத்து வேறு ஒரு துணி, தாம்பாளம், சொளவு போன்றவற்றில் மீண்டும் உலர்வதற்கு இடுவோம். அது மறுநாள் காலை சிறிது நேரம் வெயிலில் காயும். இவ்வாறு ஒவ்வொரு பேட்ச் முற்றிலும் தயாராக இரண்டு நாட்கள் எடுக்கும். 7-8 நாட்களில் அந்த வருடம் எங்கள் எல்லார் வீடுகளுக்கும் தேவையான வத்தல் தயார்.  பிளாஷ் பேக் ஓவர்.

Close to sunset the cloths would be brought down. Very mild splashing of water on the back of the cloth would enable easy removal of the dried fryums. The removed fryums would then be gathered on another dry cloth or trays. Next morning they'd again be kept under the sun to ensure any left over moisture evaporates. Thus each batch takes 2 days to completely get ready. Within 7-8 days the annual stock of fryums for all our houses would be ready. Flashback over.

நிற்க. சுவை மட்டுமல்லாது, இந்த கூழில் இருக்கும் மாவுச்சத்து(Starch) உடலுக்கு பெரும் வலிமையை தரக்கூடியது. அதுக்காக நல்லா முழுங்கிட்டு குத்துக்கல் மாதிரி அசையாம இருக்கலாம்னு அர்த்தமில்லை. அந்த காலத்தில் அயராது உடல் உழைப்பு தேவைப்பட்ட பொழுது மக்கள் அருந்தியது இவ்வகை உணவுகளையே. 99-Dosaக்களை அல்ல என்பதை தாழ்மையோடு சமர்ப்பிக்கிறேன்! வீட்டு தயாரிப்பாகவே இருந்தாலும் எண்ணையில் பொரித்தெடுப்பதால் வத்தல்களையும் பல நாட்களுக்கு ஒரு முறை என்று இடைவெளி விட்டு எடுத்துக்கொள்வது நலம். அதுதான் இருக்கிறதே என்று பொரித்து தள்ளிவிடக்கூடாது 😃

FYA - Not just the taste, the starch content of the porridge is a great source of stamina. But that doesn't mean one can hog and slouch. It matched the calories required for the manual labor done by people in those days. Even in those hard working days, they took such wholesome food and not 99-Dosas or such, is my humble point. Though these are home made fryums, it is advisable to consume them sporadically as they are deep fried in oil. It is wise not to succumb frequently to their seducing presence 😃

நெல்லை-டவுனை விட்டு வெளியே வந்து பல வருடங்கள் கழித்து, போதி தர்மர் டீ. என். ஏ மாதிரி எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த இந்த மெமரீஸ் வெளிவரக் காரணம் - மாமியார் தலைமையில் இந்த முறை ஊரில் நாங்கள் போட்ட கூழ் வத்தல். நினைவலைகளுக்கு உயிரூட்டி,  மெல்லிய பூங்காற்றாய் அடுத்த தலைமுறையையும் வருடிச் சென்றது இந்த அனுபவம். 

After decades of moving out of Nellai-Town why did these dormant memories wakeup, like Hulk tearing out of Dr. Banner? The fryums-day we had during this visit, under the leadership of my mom-in-law. Like a gentle breeze enlivening fond moments, what we did this time gave me a chance to introduce this tradition to the next generation as well.

Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
முந்தைய மாலை தட்டட்டி தயாராகுதல் Cleaning the terrace the previous evening


Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
கூழ் ரெடி Rice porridge ready for shaping

Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
கெட்டி வத்தல். வலதுபுறம் சிறு மூலையில் Gen-Z போட்டு பழகிய வத்தல்கள்
Thick fryums laid for drying. Right half top left corner was trial by Gen-Z 


Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
ஜவ்வரிசி/தண்ணி வத்தல் Thin rice fryums

பி.கு. இம்முறை நெல்லை வெயில் இதமாக இருந்ததாலும், காய்ச்சிய கூழ் அளவிற்கேற்றாற்போல் இருந்ததால் package-material-reuse செய்வதற்காக இந்த சுத்தமான புது கண்ணாடி தாள்களை உபயோகப்படுத்தினோம். இவை கோடை வெயிலுக்கு ஏற்றவை அல்ல. பொதுவாக துணிகளை உபயோகிப்பதே சிறந்தது. 

PS: We used these new clean package-sheets that were of reusable quality for laying fryums ONLY because the heat was not very high and mom-in-law had tried already. This material does not suit this purpose during summer or hotter days. Generally the dhoti cloth material is safer and recommended any day for drying fryums.

அடுத்ததா, தலைக்கு உபயோகப்படுத்தக்கூடிய ஒரு எண்ணையை பற்றி பார்ப்போம். வீட்டுல செடி வளர்க்க இடமிருந்தால் மருதாணி, செம்பருத்தி, வெற்றிலை, துளசி, கருவேப்பிலை மாதிரியான செடிகளை வளர்க்க முயற்சிக்கலாம். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தோட்ட பராமரிப்பில் ஆர்வம் அதிகம் என்பதால் எங்கள் வீட்டில் இந்த மாதிரியான செடிகளையும், முருங்கை, தென்னை, மா மாதிரியான மரங்களையும் காணலாம். கறிவேப்பிலை, மருதாணி இலைகள்,  செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை நிழலுலர்த்தி தேங்காய் எண்ணையில் காய்ச்சி அம்மா செய்தது தான் இந்த எண்ணெய். உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு முடியை கருமையா அடர்த்தியா வைத்திருக்கவும் உதவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணையில் காய்ச்சினால் 900ml அளவுக்கு வரும். நீங்கள் உபயோகிக்கும் அளவை பொறுத்து 3-5 மாதங்கள் தாராளமா நீடிக்கும்.

The next one below is a hair oil. If you have space to grow plants at home please try planting curry leaves, betel leaves, tulsi, hibiscus, henna. These will meet the basic ingredients required for a health concoction or such oils. As my parents are very interested in gardening, our house has such plants and also trees like coconut, moringa and mango. Mom prepared this oil out of the shadow-dried leaves of curry plant, henna, flowers and leaves of hibiscus. For 1lr coconut oil approx. 900ml of this hair oil can be made. The ingredients in this not only cool the body but also aid in darkening and thickening the strands of hair.

Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
தேங்காய் எண்ணையுடன் மேற்கூறிய பொருட்கள் கலந்து காய்ச்சும் பொழுது. Coconut oil heated with all ingredients 

Travel Tirunelveli Nellai Thamirabarani Western Ghats Birds Nature Food
ஆறி வடிகட்டிய பின் . The cooled and filtered oil

நெல்லையில் வட்டார உணவு மற்றும் வீட்டு தயாரிப்புகளில் கூட்டாஞ்சோறு, புளியிலாக்கரி, சாம்பார் பொடி, புளிக்குழம்பு பொடி, எள்ளு மொளகாப்பொடின்னு இன்னும் எவ்வளவோ இருந்தாலும் இந்த பயண அனுபவங்கள்ல முக்கியமானவற்றை உங்களோட பகிர்ந்திருக்கேன். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தை மேம்படுத்தியோ, மிகைப்படுத்தியோ கூறும் நோக்கத்தில் உருவானதல்ல இப்பதிவு. பிறந்த ஊர் என்பது நம் எல்லோர்க்குள்ளும் இருக்கும் உணர்வு. கிளைகளை மகிழ்ச்சியோடு எங்கும் பரப்பினாலும், வேரோடு உள்ள தனி தொடர்பு போல. இந்த இரண்டு வருட காலம் தந்த அனுபவ அறிவோட அப்பேற்பட்ட ஒரு இடத்திற்கு செல்லும் போது நெஞ்சில் நிற்கிற நிகழ்வுகளைப் பற்றிய சிலாகிப்புதான் இதன் நோக்கம். வாசிக்கும் ஒவ்வொருத்தருக்கும் அவங்க பிறந்த ஊர் நினைவுகள் நிழலாடினா எனக்கு சின்ன திருப்தி. மேலும் என் வயதொத்த வட்டத்திற்கு ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டம் வந்தாகிவிட்டது. இல்லையேல் இனிய நாற்பது இன்னா நாற்பதாகிவிடும். அதனால் வீட்டு சாப்பாடு மற்றும் தயாரிப்புகளை பற்றி இந்த தடவை சிந்தனையும் சிறிது அதிகம் சென்றது. 
 
மண்வாசனை தொடர்ந்து வீசும் …

Though there is more to the local cuisine and home preparations of Nellai, I've only focused on those that were top on the list of  memorable experiences during this visit. Home town is an emotion special to each one of us. Though we happily branch out anywhere on this planet, the connection with the roots is personal. To share the top take-aways, from such a visit carrying the lessons from the pandemic, is the intention of this post. Not to hail or glorify any one particular region. If this reminds you of your hometown and your unique bond with it, I'll consider my job done. Besides, for people of my age group, it is high time to focus on health and wellbeing. That would decide if the forties taste sweet or bittersweet. Hence the extra weightage on home-made food and other home-preparations.

Homecoming shall continue  …

இரண்டாம் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் 


Click here for Part-2 

Comments

Suba said…
Priya,
Got virtual experience of tnvli. Good exp of taste of sappadu items..hales melted in my mouth.. a piece of nostalgia..nice blog..loved it ..👌👍👍
Unknown said…
ஊருக்கு போய் வந்த மாதிரி.. உணர்கிறேன் keep the Koolu vadam safe nee lotta Vadam special tasty...well written Priya !
Priya Rajan said…
Thank you.. Aana name illayae

Yaarukkunnu save panrathu vathala :-)
பிரியா பிரமாதம்.இதுக்கு மேலே சம்பாப்பச்சரிசிச்சோறும் தேங்காத்தொவையலும்,கூட்டாஞ்சோறும் கூழுவத்தலும்,ஒவ்வொரு குழம்புக்கும் பொருத்தமா வைக்கிற தொடுகறியும்,புள்ளப்பெத்த வீட்டுப் பத்தியக்கறியும் எழுது எழுது.
Priya Rajan said…
Super points Ma'am, சம்பாப்பச்சரிசிச்சோறும் தேங்காத்தொவையலும் - அடடா!! அந்த பச்சை மொளகா கொஞ்சம் தூக்கலா இருக்க துவையல் ருசி திரும்ப நுனி நாக்குல வர வச்சுட்டீங்க Ma'am !! ஒவ்வொரு குழம்புக்கும் பொருத்தமா வைக்கிற தொடுகறியும் - ரொம்ப கரெக்ட், புளிக்கொழம்புன்னா கடைஞ்ச கீரை/ எதாவது கூட்டு. புளி மொளகா கீரைக்கு பொரியல் ஆஹா !! புள்ளப்பெத்த வீட்டுப் பத்தியக்கறி - ஆச்சி எனக்கு செஞ்சது Ma'am. அடுத்தடுத்து எல்லார்க்கும் அம்மா பண்றாங்க. கூடிய விரைவில் எழுதிருவோம் Ma'am. So happy and blessed to read your comments
Karthikeyan said…
Beautiful tamil, wheh your are going agai??😋😋😋
Priya Rajan said…
Thank you Karthikeyan :-) Don't know when next but this trip's memories will linger for some more time.
Rajkumar said…
Priya, very nice & interesting. Provoked old memories with clear descriptions which made my mouth watering. Really missing those since last two years especially. Good effort in bringing those memories in dual language. I read in Tamil only rather than English because I could feel it by our language 😊. Good you covered Rocky as-well 👏.
Priya Rajan said…
Thank you Rajkumar. Yeah Rocky can never be left out. Infact he is so humanized that he did not disturb the vathals at all when they were drying on the terrace :)
Yes you read it the right way, English paras are for non-Tamil friends. Those who know Tamil can enjoy the slang better by reading in Tamil. Wishing you a trip in the nearest future to your hometown.
Sudhasree S said…
Very very nicely expressed Pri. I too travelled with you while reading. Thanks a lot
Priya Rajan said…
Come come Nithya!! :-)
Ashish B said…
Priya - this was a most wonderful write up. Right from the description of the road and the beauty of the surroundings are Tirunelveli approaches, to the authentic local home food, to the mind boggling variety of spices and the the "fryums" - each sentence evoked nostalgia and not to mention adesire to hold on to those memories (not to mention the food)!
Priya Rajan said…
Thank you Ashish! Sorry for my delayed response :-) It is very nice to know that you enjoyed the various aspects of the article. Such words coming from a food connoisseur like you with deep knowledge and personal experience of regional flavors means a lot.
Rutvi said…
This was really good Priya Ma'am,
Enjoyed reading it :)
Priya Rajan said…
Thank you so much Rutvi !! I am very excited that you read and commented :-)