அவை உள்ளதால்
நான் உள்ளேன் எனும் புரிதல் காதல்.
இளங்காற்றும் மழை
துளியும்
தளிர் மணமும்
குளிர் ஓடையும்
குயில் பாட்டும்
மயில் அகவும்
மலை முகிலும்
நெடு வனமும்
எங்கும் நிறைதல், காதல்.
எங்கும் நிறைதல், காதல்.
பிளிறும் கரியிருக்க
பாயும் புலியிருக்க
மானும் மந்தியும் வல்லூறும்
தானிருக்க, இவற்றோடொத்து
சிறு நிலத்தில் சரி விகிதத்தில்
மானுடமும் வாழ்தல், காதல்.
பல்லுயிர் இல்லா பிரபஞ்சம் வேண்டாம்
மானும் மந்தியும் வல்லூறும்
தானிருக்க, இவற்றோடொத்து
சிறு நிலத்தில் சரி விகிதத்தில்
மானுடமும் வாழ்தல், காதல்.
பல்லுயிர் இல்லா பிரபஞ்சம் வேண்டாம்
பசியை மீறிய பிடி
சோறு வேண்டாம்
பணமொன்றே
செல்வமெனும் பேதமை வேண்டாம்
பிரளயம் வரும்
வரை பாராதிருத்தல் வேண்டாம்.
விழிப்போம்
பிழைப்போம்.
வனத்தின் வாசம்
நம் வம்சத்திற்கும் விட்டுச்செல்வோம்.
விட்டு, செல்வோம்.
பேரன்பே காதல்!
பல்லுயிரின் துடிப்பும் நாமுணர்தல் காதல்.
அவை உள்ளதால் நாம் உள்ளோம் எனும் புரிதல் காதல்.
இப்பேரன்பே, காதல்!


Comments