நெல்லையப்பர் கோவில் தேரோட்ட திருவிழா உபயம்: இணையம் |
சமீபத்தில் ஓர் அதிகாலை நெல்லை சந்திப்பு ரயில் நிலையம்- டவுன் வழியாக- வீடு வரை ...
கோலமிட்ட வாசல்களும்
கோயில் மணி பூசைகளும்
நீறணிந்த நெற்றிகளும்
நீர் சொட்டும் கூந்தல்களும்
வாங்கோதும் ஓசையதும்
மணிக்கொரு வேத வாக்கியமும்
மொட்டு மணக்கும் மல்லிகையும்
மடி முட்டு கன்றும் பசுவும்
துயில் ஏழா சிறாரும்
துயிலே காணா கடைகளும்
நடை பயிலும் மாந்தர்களும்
குடம் ஏந்தும் பூவையரும்
லேசாய் குளிரும் பனிக்காற்றும்
மிக லேசாய் மாறிய மனமுமாய்
கோழி கூவும் முன்னமே
பொய்யாமல் தினம் புலரும்
எங்கள் ஊர் அதிகாலை.
Comments